மாவட்ட செய்திகள்

இறுதி சடங்கின் போது உறவினரை கட்டையால் தாக்கிய தந்தை-மகன் கைது + "||" + Relative during the funeral Father-son arrested for assault

இறுதி சடங்கின் போது உறவினரை கட்டையால் தாக்கிய தந்தை-மகன் கைது

இறுதி சடங்கின் போது உறவினரை கட்டையால் தாக்கிய தந்தை-மகன் கைது
திருவெண்காடு அருகே இறுதி சடங்கின் போது உறவினரை கட்டையால் தாக்கிய தந்தை-மகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்காடு,

நாகை மாவட்டம், திருவெண்காடு அருகே கடைகாடு பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் பாலமுருகன்(வயது40). இவரது உறவினர் ஒருவர் இறந்து விட்டார். இறந்தவரின் இறுதி சடங்கு நெய்தவாசல் இடுகாட்டில் நடந்தது. அப்போது அதே ஊரை சேர்ந்த சு வேதாரண்யம் (63), அவரது மகன் மணிகண்டன்(23) ஆகிய 2 பேரும் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர். இறுதி சடங்கில் உறவினரான இருவரும் இறந்தவருக்கு கோடித்துணி போர்த்த முயன்றனர். இதனை பாலமுருகன் தடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சு வேதாரண்யம், மணிகண்டன் ஆகிய 2 பேரும் சேர்ந்து பாலமுருகனை கட்டையால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவரை சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில் திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்தி வழக்குப்பதிவு செய்து சுவேதாரண்யம், மணிகண்டன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.