மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சியில் லாரிகள் மோதல்; டிரைவர் பலி + "||" + Truck collision at counterfeit; The driver was killed

கள்ளக்குறிச்சியில் லாரிகள் மோதல்; டிரைவர் பலி

கள்ளக்குறிச்சியில் லாரிகள் மோதல்; டிரைவர் பலி
கள்ளக்குறிச்சியில் லாரிகள் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.
கள்ளக்குறிச்சி, 

நாமக்கல் மாவட்டம் செம்மகுளம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜலிங்கம் மகன் தனசேகர் (வயது29). லாரி டிரைவரான இவர் நேற்று சேலத்திலிருந்து சென்னை மார்க்கமாக லாரியை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் உள்ள மேம்பாலம் அருகே வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த இன்னொரு லாரியின் டிரைவர் திடீரென பிரேக் பிடித்து நிறுத்தினார். 

இதனால் அந்த லாரியின் பின்னால் தனசேகர் ஓட்டி வந்த லாரி பயங்கரமாக மோதியது. இதில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தனசேகரை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் தனசேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தொப்பூரில் லாரிகள் மோதல்; 14 எருமைமாடுகள் சாவு - 11 பேர் காயம்
தொப்பூரில் லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதில் 14 எருமைமாடுகள் செத்தன. 11 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
2. மேலூர் அருகே, லாரி மீது பஸ் மோதியது; டிரைவர் பலி - 17 பயணிகள் படுகாயம்
மேலூர் அருகே லாரி மீது பஸ் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார். மேலும் 17 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
3. புதுச்சத்திரம் அருகே, லாரிகள் மோதல்; சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் காயம்
புதுச்சத்திரம் அருகே லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்திற்கு உள்ளானதில், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.