திருந்தி வாழ்ந்தவருக்கு நேர்ந்த கதி: கூட்டாளிகளால் கை, கால்கள் முறிக்கப்பட்ட ரவுடி சாவு


திருந்தி வாழ்ந்தவருக்கு நேர்ந்த கதி: கூட்டாளிகளால் கை, கால்கள் முறிக்கப்பட்ட ரவுடி சாவு
x
தினத்தந்தி 8 Oct 2020 4:09 AM IST (Updated: 8 Oct 2020 4:09 AM IST)
t-max-icont-min-icon

திருந்தி வாழ்ந்த போது கூட்டாளிகளால் கை, கால்கள் முறிக்கப்பட்ட ரவுடி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

அரியாங்குப்பம்,

புதுவை திப்புராயப் பேட்டை ஆரோக்கிய மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் தெய்பிளான் (வயது 24), பெயிண்டர். அதே பகுதியை சேர்ந்தவர்கள் சவுந்தரபாண்டி யன் (23), தணிகாஷ் (24), கவுசி தாவீது (24). ரவுடிகளான இவர்கள் மீது இரட்டை கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவர்களில் தெய்பிளானுக்கு திருமணமாகிவிட்டதால் குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் பெயிண்டிங் தொழில் செய்து திருந்தி வாழ்ந்து வந்தார். இதற்காக தனது கூட்டாளி களுடன் பழகுவதை தவிர்த் தார். இதனால் அவர் மீது சவுந்தரபாண்டியன் உள்பட 4 பேரும் கடும் ஆத்திரமடைந் தனர். இந்தநிலையில் சம்பவத் தன்று இரவு முருங்கப்பாக்கத் தில் வேலை முடிந்து தனது நண்பர் நெஸ்தருடன் தெய் பிளான் மோட்டார் சைக்கி ளில் மரப்பாலம் சந்திப்பில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சவுந்தரபாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகள் தெய்பிளானை வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்து மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச் சென்றனர். ஆனால் அவரை விடாமல் பின்தொடர்ந்து சென்று நைனார் மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் அருகில் மடக்கிப் பிடித்தனர்.

அடித்துக் கொலை

இதன்பின் நெஸ்தரை விரட்டியடித்து விட்டு தெய் பிளானை மட்டும் வீராம் பட்டினம் வழியாக தேங்காய் திட்டு துறைமுகத்திற்கு சவுந்தரபாண்டியனும் அவ ரது கூட்டாளிகளும் கொண்டு சென்றனர். அங்கு அவரை கட்டி வைத்து 4 மணி நேரமாக இரும்புக் கம்பி, கட்டையால் தாக்கினர். இதில் உடல் முழுவதும் பலத்த காய மடைந்த தெய்பிளான் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அவரை அந்த இடத்திலேயே போட்டு விட்டு சவுந்தரபாண்டியனும், அவரது கூட்டாளிகளும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். படுகாயங்களுடன் கை, கால்கள் முறிந்த நிலையில் தெய்பிளான் மயங்கி கிடந்ததைப் பார்த்து அங்கிருந் தவர்கள் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி தெய்பிளான் நேற்று பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த சம்பவத்தை கொலை வழக்காக மாற்றி தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக சவுந்தரபாண்டி யன், தணிகாஷ், கவுசிதாவீது உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

ரவுடி வாழ்க்கையில் இருந்து விலகி திருந்தி வாழ்ந்தவர் அவரது கூட்டாளிகளாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது. கொலையான தெய் பிளானுக்கு மனைவியும், 6 மாத குழந்தையும் உள்ளனர்.

Next Story