திருச்சியில் துணிகரம்: வங்கி அதிகாரி வீட்டில் தங்கம், வெள்ளி நகை திருட்டு + "||" + Venture in Trichy: Bank officer steals gold and silver jewelery from home
திருச்சியில் துணிகரம்: வங்கி அதிகாரி வீட்டில் தங்கம், வெள்ளி நகை திருட்டு
திருச்சியில் வங்கி அதிகாரி வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிய ஆசாமிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
திருச்சி,
திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள சீனிவாசாநகர் 5-வது மெயின்ரோடு திலகர் தெருவை சேர்ந்தவர் விநாயகமுருக ஸ்ரீதர் (வயது 33). இவர், திருச்சியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கியின் மண்டல அலுவலகத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 1-ந் தேதியன்று வீட்டை பூட்டிவிட்டு, கரூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு விநாயகமுருக ஸ்ரீதர் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் சென்றிருந்தார். பின்னர் 5-ந்தேதியன்று மாலை அவர் வீடு திரும்பினார். அங்கு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது.
அதில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலி, ¼ கிலோ வெள்ளி நகைகள் மற்றும் மடிக்கணினி ஆகியவை திருட்டு போயிருந்தன. அவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து பொருட்களை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர் திருச்சி புத்தூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
சர்வதேச மல்யுத்த போட்டி உக்ரைனில் நடந்தது. இதில் நேற்று நடந்த 53 கிலோ எடை பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், 2017-ம் ஆண்டு உலக சாம்பியனான கலாட்ஜின்ஸ்காயுடன் (பெலாரஸ்) மோதினார்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.72 லட்சம் மதிப்புள்ள 1½ கிலோ தங்கம் மற்றும் ரூ.7½ லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.