அரியலூரில் கொரோனாவுக்கு முதியவர் பலி - பெரம்பலூரில் புதிதாக 7 பேருக்கு தொற்று + "||" + Elderly man killed by corona in Ariyalur - 7 new infections in Perambalur
அரியலூரில் கொரோனாவுக்கு முதியவர் பலி - பெரம்பலூரில் புதிதாக 7 பேருக்கு தொற்று
அரியலூரில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார். பெரம்பலூரில் புதிதாக 7 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர்,
அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களில் தலா 3 பேருக்கும், திருமானூர், ஆண்டிமடம் ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் தலா 5 பேருக்கும், அரியலூர் நகராட்சி பகுதிகளிலும், செந்துறை, தா.பழூர் ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் தலா 2 பேருக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 9 பேருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 4 பேருக்கும் என மொத்தம் 35 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,991 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே கொரோனாவிற்கு மாவட்டத்தில் 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவிற்கு சாவு எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 774 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 3,175 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 963 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
பெரம்பலூர் வட்டாரத்தில் நேற்று 3 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 2 பேரும், ஆலத்தூர், வேப்பூர் ஆகிய வட்டாரங்களில் தலா ஒருவரும் என மொத்தம் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1, 936 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் ஏற்கனவே 20 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 1, 821 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், தற்போது 95 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 341 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.