மேலும் 182 பேருக்கு கோரோனா: 318 பேர் குணமடைந்தனர் - சிகிச்சை பலனின்றி 2 பேர் பலி


மேலும் 182 பேருக்கு கோரோனா: 318 பேர் குணமடைந்தனர் - சிகிச்சை பலனின்றி 2 பேர் பலி
x
தினத்தந்தி 8 Oct 2020 6:30 AM GMT (Updated: 8 Oct 2020 6:22 AM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 318 பேர் குணமடைந்தனர். சிகிச்சை பலன் இன்றி 2 பேர் பலியாகினர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் 182 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் தற்போது தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 329-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா சிகிச்சை பெற்று வந்த 59 வயது மற்றும் 75 வயது ஆண்கள் 2 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.இந்நிலையில் நேற்று 2 பேரும் சிகிச்சை பலன் இன்றி பலியாகினர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 152-ஆக உயர்ந்துள்ளது.

இதுபோல் திருப்பூர் மாவட்டத்தில் தற்போது 1146 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார்கள். 6 ஆயிரத்து 236 பேர் வீட்டு தனிமையில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் நேற்று புதிதாக 347 பேர் சேர்க்கப்பட்டனர். 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த 428 பேர் விடுவிக்கப்பட்டனர்.

திருப்பூர் மற்றும் கோவை அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பலரும் குணமடைந்து வருகிறார்கள். அதன்படி நேற்று மட்டும் மாவட்டத்தை சேர்ந்த 318 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இவர்கள் அனைவரையும் 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 2 ஆயிரத்து 770 பேருக்கு சளி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story