மாவட்ட செய்திகள்

சொந்த பலத்தில் மராட்டியத்தில் பா.ஜனதா விரைவில் ஆட்சிக்கு வரும் ஜே.பி.நட்டா உறுதி + "||" + JP Natta assured that BJP will soon come to power in Maratha power on its own

சொந்த பலத்தில் மராட்டியத்தில் பா.ஜனதா விரைவில் ஆட்சிக்கு வரும் ஜே.பி.நட்டா உறுதி

சொந்த பலத்தில் மராட்டியத்தில் பா.ஜனதா விரைவில் ஆட்சிக்கு வரும் ஜே.பி.நட்டா உறுதி
மராட்டிய பா.ஜனதா தனது சொந்த பலத்தில் விரைவில் ஆட்சிக்கு வரும் என கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உறுதிபட கூறினார்.
மும்பை,

மராட்டியத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாரதீய ஜனதா அதிக தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக விளங்கியது. தேர்தலுக்கு பிறகு சிவசேனா, பாரதீய ஜனதா இடையே ஏற்பட்ட முதல்-மந்திரி பதவிக்கான போட்டியால் இந்த கூட்டணி பிரிந்தது.


இதைதொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து புதிய கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. பாரதீய ஜனதா எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில் நேற்று பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதில் பாரதீய ஜனதா கட்சி தலைவர் ஜே.பி.நட்டா காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டு பேசினார்.

இதில் அவர் கூறியதாவது:-

ஏமாற்றப்பட்டோம்...

2019-ம் ஆண்டு மராட்டிய சட்டசபை தேர்தல் பாரதீய ஜனதாவுக்கானது தான். ஆனால் நாம் ஏமாற்றப்பட்டோம். விரைவில் தற்போது ஆட்சியில் இருக்கும் 3 ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சி வரிசைக்கு செல்லும். பாரதீய ஜனதா தனது சொந்த பலத்தில் மாநிலத்தில் ஆட்சி பொறுப்புக்கு வரும். மராட்டிய பாரதீய ஜனதா தொண்டர்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன்.

மராட்டியத்தில் தற்போது நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. வலது கை என்ன செய்கிறது என்று இடது கைக்கு தெரியாது.

தேவேந்திர பட்னாவிசை மீண்டும் முதல்-மந்திரி இருக்கையில் பார்க்க பலரும் விரும்புகின்றனர். தற்போது நாங்கள் மராட்டியத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக இருக்கிறோம். விரைவில் நாங்கள் ஆளும் கட்சியாக மாறப்போகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள வியூகம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம் காணொலி காட்சி வழியாக இன்று நடக்கிறது.
2. சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது
சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது.
3. சென்னையில் 196 இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தேர்தல் அதிகாரி தகவல்
சென்னையில் 196 இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படும் என தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தெரிவித்தார்.
4. சென்னையில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க பறக்கும் படை மாநகராட்சி கமிஷனர் தொடங்கி வைத்தார்
சென்னையில் தேர்தல் விதி மீறல்களை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை குழுக்களை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
5. ஆழியூர்-திருக்கண்ணங்குடி சாலையில் உள்ள பழுதடைந்த பழையனூர் தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும்
ஆழியூர்-திருக்கண்ணங்குடி சாலையில் உள்ள பழுதடைந்த பழையனூர் தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என கீழ்வேளூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.