குளித்தலை அருகே, போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை
குளித்தலை அருகே போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பெரிய மலையாண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆண்டி. இவரது மகன் சதீஷ்குமார் (வயது 27). இவர் கோவையை அடுத்த கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படைப்பிரிவில் போலீஸ் காரராக பணிபுரிந்து வந்தார். இவர் சில நாட்களுக்கு முன்பு விடுப்பில் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
இவருக்கு சிறுவயதில் இருந்தே வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி இரவு சதீஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் சாப்பிட்டுவிட்டு தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர். நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு சதீஷ்குமார் வாந்தி எடுத்துள்ளார்.
இதுகுறித்து சதீஷ்குமாரிடம் அவரது பெற்றோர் கேட்டபோது, அவர் களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆபத்தான நிலையில் இருந்த சதீஷ்குமாரை முசிறியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சதீஷ்குமாரின் தந்தை ஆண்டி குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமார் தற்கொலை செய்து கொண்ட தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
Related Tags :
Next Story