மாவட்ட செய்திகள்

சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து சிறுவனை கொன்று, பாட்டி தற்கொலை - பரங்கிப்பேட்டை அருகே பரிதாபம் + "||" + Giving poison mixed in food Grandmother commits suicide by killing boy

சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து சிறுவனை கொன்று, பாட்டி தற்கொலை - பரங்கிப்பேட்டை அருகே பரிதாபம்

சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து சிறுவனை கொன்று, பாட்டி தற்கொலை - பரங்கிப்பேட்டை அருகே பரிதாபம்
பரங்கிப்பேட்டை அருகே சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து சிறுவனை கொன்று விட்டு, அவனது பாட்டியும் தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
பரங்கிப்பேட்டை, 

பரங்கிப்பேட்டை அருகே உள்ள சின்னூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவமணி. இவரது மனைவி சாந்தி(வயது 46). இவர்களுடைய மகள் பிரதீபாவுக்கும்(26), சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த தேசப்பன் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு விகாஸ்(5) என்ற மகன் இருந்தான்.

கணவன்-மனைவி இருவரும் சென்னை காசிமேடு பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரதீபா கோபித்துக் கொண்டு தன்னுடைய மகனுடன், சின்னூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்து வசித்து வந்தார்.

அதன் பிறகு சில மாதங்களில் பிரதீபா தனது தாய் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். பின்னர் அவர் வீடு திரும்பி வரவில்லை என தெரிகிறது. இதனால் கணவரை இழந்த சாந்தி, தனது பேரனை வளர்த்து வந்தார். இதற்கிடையே அவர் போதிய வருமானமின்றி குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவர் தனது பேரனை கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக தெரிகிறது. அதன்படி சம்பவத்தன்று சாந்தி, சாப்பாட்டில் விஷத்தை கலந்து தனது பேரனுக்கு கொடுத்துள்ளார். பின்னர் அவரும் விஷம் கலந்த சாப்பாட்டை சாப்பிட்டுள்ளார்.

இதில் ஒருவர் பின் ஒருவர் மயங்கி விழுந்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சாந்தி, கடலூர் அரசு மருத்துவமனையிலும், விகாஸ் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சாந்தியும், விகாசும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாண்டிச்செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.