மதகடிப்பட்டு பாளையத்தில் உரிமம் இல்லாத தொழிற்சாலைக்கு ‘சீல்’


மதகடிப்பட்டு பாளையத்தில் உரிமம் இல்லாத தொழிற்சாலைக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 10 Oct 2020 3:43 AM IST (Updated: 10 Oct 2020 3:43 AM IST)
t-max-icont-min-icon

மதகடிப்பட்டு பாளையத்தில் உரிமம் இல்லாத தொழிற்சாலைக்கு ‘சீல்’ கொம்யூன் ஆணையர் அதிரடி.

திருபுவனை,

திருபுவனை தொகுதி மதகடிப்பட்டு பாளையம் பகுதியில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள், கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலை, கம்பெனிகளில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார், வில்லியனூர் தாசில்தார் ஸ்ரீஜித், திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் அஜய்குமார் ஆகியோர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள ஒரு தனியார் தோல் தொழிற்சாலை உரிமம் பெறாமல் இயங்கி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த தொழிற்சாலைக்கு சீல் வைத்து பூட்டினர். மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் நாகராஜ், இளநிலை பொறியாளர் பாஸ்கர், உதவி மேலாளர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.




Next Story