தலையில் கல்லைப்போட்டு மனைவி கொலை கணவரும் தூக்குப்போட்டு தற்கொலை
தலையில் கல்லைப்போட்டு மனைவியை கொன்ற கணவர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சோழிங்கநல்லூர்,
செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் நாராயணன் (வயது 65). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மனோன்மணி (48). இவர்கள் தங்கள் மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தனர். கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலை அவர்களது மகன் மற்றும் மகள் வெளியில் சென்று விட்டனர்.
பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர், நாராயணன் வீட்டுக்கு வந்து கதவை தட்டினார். கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தார்.
கொலை செய்து விட்டு தானும் தற்கொலை
அங்கே நாராயணன் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு அவரது மனைவி மனோன்மணி தலையில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். குடும்பத்தகராறில் மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற நாராயணன் தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்த செம்மஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்.
மேலும் அடையாறு காவல் துணை கமிஷனர் விக்ரமன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.
இது குறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story