கூலித்தொழிலாளி கொலை வழக்கில் வாலிபர் கைது; கோர்ட்டில் 2 பேர் சரண்


கூலித்தொழிலாளி கொலை வழக்கில் வாலிபர் கைது; கோர்ட்டில் 2 பேர் சரண்
x
தினத்தந்தி 10 Oct 2020 3:30 AM IST (Updated: 10 Oct 2020 8:13 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே நடந்த கூலித்தொழிலாளி கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

வேதாரண்யம், 

வேதாரண்யம் புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்தவர் சிவசங்கரன் (வயது 36). கூலித்தொழிலாளி. இவருக்கு மலர்க்கொடி என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். சம்பவத்தன்று சிவசங்கரன் தனது வீட்டின் எதிரே உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் சிவசங்கரனை அவரது நண்பர்கள் கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த சிவசங்கரனை நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிவசங்கரன் இறந்தார்.

இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய புஷ்பவனம் பகுதியை சேர்ந்த அருள்அழகன்(20) என்பவரை போலீசார் கைது செய்தனர். சிவசங்கரனை வெட்டிக்கொலை செய்த புஷ்பவனத்தை சேர்ந்த முருகையன்(56), அவரது மகன் காஞ்சி நாதன்(26) இருவரும் வேதாரண்யம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இருவரையும் 15 நாள் காவலில் வைக்க குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி லிசா உத்தரவிட்டார்.

Next Story