பேரளம் அருகே, சாலையை சீரமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
பேரளம் அருகே சாலையை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
நன்னிலம்,
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த பேரளம் அருகேயுள்ள திருமியச்சூரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்காததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பேரளத்தில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட் டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார்.
கிளைச் செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித் தார். இதில் மாவட்ட செயலா ளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட ஊராட்சி உறுப்பி னர் முகமது உதுமான் மற்றும் தியாகு ரஜினிகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியல் போராட்டம் பேரளம் கடைத்தெருவில் காலை 10 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் நடந்தது. இதனால் திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story