ஆபத்தான பகுதிகளில் பி.ஏ.பி. வாய்க்காலில் குளிக்க தடை - விளம்பர பதாகை வைத்து எச்சரிக்கை


ஆபத்தான பகுதிகளில் பி.ஏ.பி. வாய்க்காலில் குளிக்க தடை - விளம்பர பதாகை வைத்து எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 Oct 2020 11:30 AM IST (Updated: 10 Oct 2020 11:29 AM IST)
t-max-icont-min-icon

ஆபத்தான பகுதியில் பி.ஏ.பி. வாய்க்காலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது.

பொங்கலூர்,

திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் பி.ஏ.பி. பிரதான கால்வாய் வழியாக செல்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறந்து விடப்படும் போது வாய்க்காலில் பொதுமக்கள் குளிப்பதும், துணி துவைப்பதும் என நடந்து வருகிறார்கள்.

இதில் அவ்வப்போது குளிப்பவர்கள், துணி துவைப்பார்கள் சிலர் தவறி வாய்க்காலில் உள்ளே விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

கடந்த 5 நாட்களுக்கு முன்பு பொங்கலூர் அருகே காரப்பாளையம் என்ற இடத்தில் 3 பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் ஆபத்தான பகுதிகளில் குளிப்பது, துணி துவைப்பதும், வாகனங்கள் கழுவுவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக விளம்பரப் பதாகைகள் வைத்துள்ளனர். இதனை மீறி வாய்க்கால்களில் இறங்குபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக எச்சரிக்கை பதாகைகளையும் வைத்துள்னர்.

Next Story