மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவராக ஜெய்ஜீத் சிங் நியமனம்


மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவராக ஜெய்ஜீத் சிங் நியமனம்
x
தினத்தந்தி 11 Oct 2020 5:00 AM IST (Updated: 11 Oct 2020 5:00 AM IST)
t-max-icont-min-icon

மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவராக ஜெய்ஜீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை, 

மராட்டிய அரசு 15 மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளை அதிரடியாக பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதில் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவராக இருந்த தேவன் பாரதி கூடுதல் டி.ஜி.பி.யாக மாநில பாதுகாப்பு கழகத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் டி.ஜி.பி.யாக உள்ள ஜெய்ஜீத் சிங் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் மாநிலத்தில் நக்சல் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் மற்றும் மும்பையில் ஏற்கனவே பல்வேறு பொறுப்புகளை கவனித்து வந்து உள்ளார். மேலும் 4 ஆண்டுகள் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையிலும் (சி.ஐ.எஸ்.எப்) துணை ஐ.ஜி.யாக பணிபுரிந்து இருக்கிறார்.

இதேபோல மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி பிரபாத் குமார் லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் டி.ஜி.பி.யாகவும், நாவல் பஜாஜ் பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story