தேவூரில் கனமழை சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு


தேவூரில் கனமழை சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 11 Oct 2020 3:15 AM IST (Updated: 11 Oct 2020 6:56 AM IST)
t-max-icont-min-icon

தேவூரில் பெய்த கன மழை காரணமாக சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது.

தேவூர், 

ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில் உற்பத்தி யாகும் சரபங்கா நதி, ஓமலூர், சின்னப்பம்பட்டி, எடப்பாடி, அரசிராமணி, செட்டிப்பட்டி வழியாக தேவூரில் தடுப் பணையை கடந்து அண்ணமார் கோவில் பகுதி யில் காவிரி ஆற்றில் கலக்கிறது. ஆக்கிரமிப்பு காரணமாக கடந்த 20 ஆண்டு களாக ஏற்காடு பகுதியில் இருந்து தேவூர் சரபங்கா ஆற்றுக்கு தண்ணீர் வராமல் தடைபட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலை களில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் தேவூர் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள கரும்பு, வாழைகள் சாய்ந்தன. மேலும் சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சரபங்கா ஆற்று தடுப்பணையை தாண்டி தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதில் இளைஞர்கள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.

இதனிடையே தண்ணீர் மறுகால் பாய்ந்து செல்வதால் பெரமச்சிபாளையம், சென்றாயனூர், சோழக் கவுண்ட னூர் பகுதியை சேர்ந்த கிராம மக்கள், தேவூர் செல்வதற்கு 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டி யுள்ளது. இதனால் அந்த பகுதியில் பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story