திருப்பத்தூரில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம் - முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 100 பேர் கைது


திருப்பத்தூரில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம் - முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 100 பேர் கைது
x
தினத்தந்தி 11 Oct 2020 11:30 AM IST (Updated: 11 Oct 2020 11:14 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் உத்தரபிரதேச அரசை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல்பாசித் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர்,

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசில் பாலியல் வன்கொடுமை மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி மீது தாக்குதல் நடத்திய உத்தரபிரதேச அரசை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் எஸ்.டி.நிசார்அகமது தலைமை தாங்கினார். எம்.எச்.நவாஸ் அகமத், எம்.என்.நயீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ஏ.வி.எஸ்.அப்துல்வாஹித் வரவேற்றார். தேசிய இணைச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எச்.அப்துல்பாசித் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் உத்தரபிரதேச அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் நகர தலைவர்கள் பாரூக், இக்பால்உபேத், சல்மான் மற்றும் நவாஸ்அகமத், அக்ரம், சிராஜ், ரபீக்பாஷா உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகரத்தலைவர் ஜெ.அப்ரார்பேக் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல்பாசித் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story