கடலூரில், வாக்குச்சாவடி வாரியாக அ.தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் பாசறை குழுக்கள் அமைக்கும் பணி அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்
கடலூரில், வாக்குச்சாவடி வாரியாக அ.தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் பாசறை குழுக்கள் அமைக்கும் பணியை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்.
கடலூர்,
கடலூர் நகர அ.தி.மு.க. சார்பில் 45 வார்டுகளிலும் வாக்குச்சாவடி வாரியாக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை குழுக்கள் அமைத்தல், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்த்தலுக்கான படிவம் வழங்கும் நிகழ்ச்சி கடலூர் பாதிரிக்குப்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல்குமார், ஒன்றிய செயலாளர் பழனிசாமி, ஒன்றியக்குழு தலைவர் பக்கிரி, நகர துணை செயலாளர் கந்தன், பேரவை பொருளாளர் ஆறுமுகம், விவசாய அணி செயலாளர் காசிநாதன், மீனவரணி செயலாளர் தங்கமணி, நகர அவை தலைவர் எம்.ஜி.ஆர். என்கிற ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மத்திய மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எம்.சி.சம்பத் கலந்து கொண்டு புதிய குழுக்கள் அமைத்தல், புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கி தொடங்கி வைத்தார். இதில் அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவர் கெமிக்கல் மாதவன், மாவட்ட பிரதிநிதிகள் ஆர்.வி.மணி, வெங்கட்ராமன், ஒன்றிய கவுன்சிலர்கள் மகேஸ்வரி விஜயராயலு, வேல்முருகன், கிரிஜா செந்தில்குமார், குமரகுரு, முன்னாள் கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வன், நகர பொருளாளர் தனசேகரன், ஒன்றிய துணை செயலாளர் மதிவாணன், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story