ஜோலார்பேட்டையில் ரூ.35 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட ராணி மங்கம்மாள் குளம் அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார்
ஜோலார்பேட்டையில் ரூ.35 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட ராணி மங்கம்மாள் குளத்தை அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார்.
ஜோலார்பேட்டை,
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகம் அருகில் வசிக்கும் மக்களுக்கு நீண்டநாட்களாக குடிநீர் பிரச்சினை இருந்து வந்தது. எனவே அங்குள்ள ராணிமங்கம்மாள் குளத்தைச் தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, அதில் பூங்கா அமைத்து, மின் விளக்குகளை பொருத்த வேண்டும். குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என அமைச்சரிடம் மனு கொடுக்கப்பட்டது.
மனுவை பரிசீலனை செய்த அமைச்சர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன்படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.35 லட்சம் மதிப்பில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ராணிமங்கம்மாள் குளத்தைத் தூர்வாரி, கரையை பலப்படுத்தி, கரையைச் சுற்றிலும் சுவர் எழுப்பி ராணிமங்கம்மாள் குளம் சீரமைக்கப்பட்டது.
நேற்று ராணிமங்கம்மாள் குளம் மக்கள் பயன்பாட்டுக்காக திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் ராமஜெயம் வரவேற்றார். போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், மாவட்ட திட்ட அலுவலர் மகேஷ்பாபு, ஜோலார்பேட்டை முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ்.பி.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்று சீரமைக்கப்பட்ட ராணிமங்கம்மாள் குளத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்துப் பேசுகையில், நம்முடைய பகுதிகளை திப்புசுல்தான் ஆண்டு கொண்டிருந்தபோது, தென் மாவட்டத்தில் இருந்து இங்கு வந்து நீர்நிலைகளை மேம்படுத்த உருவாக்கப்பட்டது தான் ராணிமங்கம்மாள் குளம். இது, வரலாற்றுச் சிறப்பு மிக்க குளம். இந்தக் குளத்தை பொதுமக்களுக்காக சீரமைத்துக் கொடுத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன், என்றார்.
விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் புலவர் சா.ரமேஷ், திருப்பத்தூர் நகர கழக செயலாளர் டி.டி.குமார், ஜோலார்பேட்டை ஒன்றிய குழு முன்னாள் தலைவர் ஆர்.ரமேஷ், ஒப்பந்ததாரர் பார்த்தீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி பொறியாளர் தனபாண்டியன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story