வாணியாறு அணையில் ரூ.16½ கோடியில் கால்வாய்கள் புனரமைக்கும் பணி அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்
வாணியாறு அணை கால்வாய்கள், அணைக்கட்டுகள், வாய்கால்கள் ரூ.16½ கோடி மதிப்பில் புனரமைத்து நவீனப்படுத்தும் பணிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வாணியாறு அணை கால்வாய்கள், அணைக்கட்டுகள், வாய்கால்கள் ரூ.16.62 கோடி மதிப்பில் புனரமைத்து நவீனப்படுத்துதல் ஆகிய பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகளுக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. விழாவுக்கு உதவி கலெக்டர் பிரதாப் தலைமை தாங்கினார். கோவிந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட மத்திய கூட்டுறவு தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு உதவி செயற்பொறியாளர் சரவணன் வரவேற்றார்.
விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு வாணியாறு அணையில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பூங்கொடி சேகர், தாசில்தார் கற்பகவடிவு, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார் அமைப்பு உதவி பொறியாளர் பரிமளா, மத்திய கூட்டுறவு இயக்குனர் சிவப்பிரகாசம், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் மதியழகன், பழனிசாமி மற்றும் உள்ளாட்சி, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் வாணியாறு அணை வடிநிலத்தில் இருந்து வாணியாறு அணையின் கால்வாய்கள் மற்றும் வெங்கடசமுத்திரம், ஆலாபுரம் அணைக்கட்டுகள், பொதியம்பள்ளம் அணைக்கட்டு, அதன் வழங்கு வாய்க்கால், எலுமிச்சைபெருமாள் கோவில், கணக்கண் அணைக்கட்டுகள் மற்றும் அதன் வழங்கு வாய்க்கால்கள் ரூ.16.62 கோடி மதிப்பில் புனரமைத்து நவீனப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகள் விரைவில் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று கூறினார்.

Related Tags :
Next Story