மெட்ரோ ரெயில் பணிமனை இடமாற்றத்தால் கூடுதலாக ரூ.4 ஆயிரம் கோடி செலவாகும் தேவேந்திர பட்னாவிஸ் சொல்கிறார்


மெட்ரோ ரெயில் பணிமனை இடமாற்றத்தால் கூடுதலாக ரூ.4 ஆயிரம் கோடி செலவாகும் தேவேந்திர பட்னாவிஸ் சொல்கிறார்
x
தினத்தந்தி 12 Oct 2020 9:21 PM GMT (Updated: 12 Oct 2020 9:21 PM GMT)

ஆரேகாலனியில் இருந்து காஞ்சூர்மார்கிற்கு மெட்ரோ ரெயில் பணிமனை இடமாற்றம் செய்யப்பட்டதால் அந்த திட்டத்தை நிறைவேற்ற கூடுதலாக ரூ.4 ஆயிரம் கோடி செலவாகும் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

மும்பை,

மும்பையில் கொலபா- பாந்திரா- சீப்ஸ் இடையே 3-வது மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்திற்காக ஆரே காலனியில் பணிமனை அமைக்கும் பணி நடந்து வந்தது. ஆனால் சமீபத்தில் ஆரேகாலனியில் நடந்து வந்த மெட்ரோ திட்டப்பணிகளுக்கு மாநில அரசு தடைவிதித்தது. மேலும் ஆரேகாலனியை வனப்பகுதியாக அறிவித்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆரேகாலனியில் அமைய இருந்த மெட்ரோ பணிமனை காஞ்சூர்மார்க்கிற்கு மாற்றப்படுவதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

கூடுதலாக ரூ.4 ஆயிரம் கோடி

மாநில அரசின் முடிவுக்கு முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

ஒருவரின் அகங்காரத்தை திருப்திப்படுத்த ஆரேகாலனி மெட்ரோ ரெயில் பணிமனை காஞ்சூர்மார்க்கிற்கு மாற்றப்பட்டது துரதிருஷ்டவசமானது. இந்த முடிவால் மெட்ரோ பணி திட்டத்தை முடிக்க கூடுதலாக ரூ.4 ஆயிரம் கோடி செலவாகும். ஒருவரின் அகங்காரத்தை திருப்திப்படுத்த ஏன் இவ்வளவு பெரிய விலையை கொடுக்க வேண்டும்?. இதனால் யார், எதற்காக பாதிக்கப்பட வேண்டும் என அரசு விரும்புகிறது?.

மேலும் மாநில அரசின் இந்த முடிவால் 3-வது மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் முடிய காலவரையறையற்ற தாமதம் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story