ஒலக்கூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு


ஒலக்கூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு
x
தினத்தந்தி 13 Oct 2020 4:29 AM GMT (Updated: 13 Oct 2020 4:29 AM GMT)

ஒலக்கூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாமில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார்.

திண்டிவனம்,

திண்டிவனம் வட்டம் ஒலக்கூர் ஒன்றிய மேற்கு அ.தி.மு.க. சார்பில் மேல்பாக்கம் மற்றும் வெள்ளிமேடுபேட்டை ஆகிய ஊராட்சிகளில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒலக்கூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பொன்மலர் தயாளன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.பி.ராஜேந்திரன், தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் முகமது ஷெரீப், முன்னாள் ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் பன்னீர், ஒலக்கூர் ஒன்றிய மேற்கு துணை செயலாளர் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் வரவேற்றார். ஒலக்கூர் ஒன்றிய மேற்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராமதாஸ் தொடக்க உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து, ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் விரைவில் தேர்தல் வர உள்ளது. தமிழகத்தில் 3-வது முறையாக அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தி.மு.க.வில் கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் முதல்-அமைச்சர் மற்றும் மேல்பதவிகளுக்கு வரமுடியும். ஆனால் அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டனுக்கு கூட பதவி கிடைக்கும். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்காக பணியாற்ற வேண்டும்.

கூட்டத்தில், ஒலக்கூர் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ராஜேந்திரன், ஜெகதீசன், ராஜாராமன், மக்புல்பாய், முருகானந்தம், சீனு, பன்னீர், சுந்தரமூர்த்தி, பூபாலன், ராஜேந்திரன், பாண்டுரங்கன், கமல், சீனிவாசன், பெருமாள், பாலகிருஷ்ணன், வேலு, சிவா, சிவச்சந்திரன், கிருஷ்ணன், ராஜதுரை, சந்திரசேகர், ராஜேஷ், நீலமேகன், அண்ணா தொழிற்சங்க மின்சார பிரிவு மண்டல செயலாளர் கொடியம் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒலக்கூர் மேற்கு ஒன்றிய பாசறை கிளை கோவர்த்தனன் நன்றி கூறினார்.

Next Story