பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு புது பானை, அடுப்பு வழங்க வேண்டும் கலெக்டரிடம், மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தினர் மனு


பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு புது பானை, அடுப்பு வழங்க வேண்டும் கலெக்டரிடம், மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தினர் மனு
x
தினத்தந்தி 13 Oct 2020 11:13 AM IST (Updated: 13 Oct 2020 11:13 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையின் போது புது பானை, அடுப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தினர் கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்க மாநில துணை தலைவர் வக்கீல் முருகேசன் தலைமையில் இணை செயலாளர் சுந்தர்ராஜ், மாவட்ட செயல் தலைவர் ஜெயபால், மாவட்ட தலைவர் சரவணன், செயலாளர் கோவிந்தசாமி, பொருளாளர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் நேற்று கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டியிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் குலாலர் சமூக மக்களாகிய நாங்கள் 40 லட்சம் பேர் வாழ்ந்து வருகிறோம். ஆனால் மண்பாண்ட தொழில் செய்கிற தொழிலாளர்கள் 4 லட்சம் பேர் தான், சட்டி, பானைகள், அகல்விளக்கு, உண்டியல், அடுப்பு, தெய்வ உருவங்கள் போன்ற பொம்மைகள் செய்து வாழ்ந்து வருகிறோம். தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படுகிறது. நலிந்த நிலையில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வு மலர, 2021-ம் ஆண்டு முதல் பொங்கல் பண்டிகையின் போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஒரு பானை, ஒரு அடுப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள பாஞ்சலியூர் கிராமத்தில் வசித்து வரும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில், பாஞ்சாலியூரில் 50-க்கும் மேற்பட்டவர்கள் சொந்தமாக வீடு, நிலம் இல்லாமல் வசித்து வருகிறோம். எங்களுக்கு இலவச வீட்டுமனை கேட்டு பல ஆண்டுகளாக மனுக்களை அளித்து வருகிறோம். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வேப்பனப்பள்ளி பகுதியை சேர்ந்த ஒருவர் எங்களுக்கு அரசின் வீட்டுமனை பெற்று தருவதாக கூறினார்.

இதற்காக தமிழக அரசின் இலவச 3 சென்ட் வீட்டுமனைக்கான போராட்ட கூட்டமைப்பு தொடங்கி, நிலம் கோரும் விண்ணப்பதாரர் ரசீது வழங்கினார். அப்போது, வீடு ஒதுக்கீடு பெற்று தருவதாக கூறி ஒவ்வொரு நபர்களிடம் தலா ரூ.5 ஆயிரம் பெற்றார். இதுவரை எங்களுக்கு வீட்டுமனை பெற்று தரவில்லை. வாங்கிய பணத்தையும் கொடுக்கவில்லை. எனவே, பணத்தை பெற்று கொண்டு மோசடி செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும். வீடு இல்லாமல் தவித்து வரும் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, பசுமைவீடு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story