மோகனூர் அருகே மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி உதவி கலெக்டர் விசாரணை


மோகனூர் அருகே மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 13 Oct 2020 6:13 AM GMT (Updated: 13 Oct 2020 6:13 AM GMT)

மோகனூர் அருகே மின்சாரம் தாக்கி இளம்பெண் பலியானார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மோகனூர்,

மோகனூர் அருகே உள்ள ஆரியூர் ஊராட்சிக்குட்பட்ட புதுமாரப்பனூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 52). டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் ரஞ்சிதா (வயது 25). இவருக்கும், கரூர் மாவட்டம் புஞ்சைபுகழூர் புதுகருக்கம்பாளையத்தை சேர்ந்த காகித ஆலை பணியாளர் பூவேந்திரன் என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த தம்பதிகளுக்கு 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்த ரஞ்சிதா நேற்று காலை குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டரை போட்டுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த அடிபட்ட அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி ரஞ்சிதா இறந்தார். இதுகுறித்து அவரது தந்தை மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 1½ ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக உதவி-கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மின்சாரம் தாக்கி இளம்பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story
  • chat