கடன் பணத்தை கேட்டு தாக்குதல் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை கந்துவட்டிக்காரர் கைது
கடன் பணத்தை கேட்டு தாக்குதல் நடத்தியதால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கந்துவட்டிக்காரர் கைது செய்யப்பட்டார்.
அவுரங்காபாத்,
பீட் மாவட்டம் ராஜூரி கிராமத்தை சேர்ந்தவர் கங்காராம்(வயது45). விவசாயியான இவர் அதே பகுதியை சேர்ந்த கந்துவட்டிக்காரர் யுவராஜ் என்பவரிடம் ரூ.2 ஆயிரம் கடனாக வாங்கி இருந்தார். கொரோனா பரவல் காரணத்தினால் வருமானமின்றி கங்காராம் இருந்ததால் பணத்தை திருப்பி செலுத்த இயலவில்லை.
இதனால் கடந்த 6-ந்தேதி யுவராஜ் தனது பண்ணை வீட்டிற்கு கங்காராமை அழைத்து உள்ளார். அங்கு வந்த அவரிடம் தனது பணத்தை வட்டியும் அசலுமாக சேர்த்து ரூ.28 ஆயிரம் தரும்படி தெரிவித்தார்.
விவசாயி தற்கொலை
ஆனால் அவரிடம் பணம் இல்லாததால் ஆத்திரமடைந்த யுவராஜ் அவரை தாக்கி உள்ளார். மேலும் கங்காராமிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறித்து கொண்டார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த கங்காராம் சம்பவத்தன்று வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று உடலை மீட்டனர். மேலும் அவரது சட்டை பையில் இருந்த கடிதத்தை கைப்பற்றினர். இதில், கந்துவட்டிக்காரர் தொல்யைால் தான் தற்கொலை செய்து கொண்டதாக எழுதி வைத்திருந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து யுவராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story