பி.யூ. கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பணி நியமன ஆணை வழங்க கோரி ஆசிரியர்கள் தர்ணா குமாரசாமி நேரில் ஆதரவு


பி.யூ. கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பணி நியமன ஆணை வழங்க கோரி ஆசிரியர்கள் தர்ணா குமாரசாமி நேரில் ஆதரவு
x
தினத்தந்தி 13 Oct 2020 10:09 PM GMT (Updated: 13 Oct 2020 10:09 PM GMT)

பி.யூ. கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள், பணி நியமன ஆணை வழங்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், பி.யூ.கல்லூரிகளுக்கு 1,200 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கொரோனா பரவல் காரணமாக அவர்களுக்கு அரசு பணி நியமன ஆணையை வழங்காமல் இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த 1,200 ஆசிரியர்கள், தங்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று கோரி தொடர் தர்ணா போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பி.யூ.கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகம் முன்பு அவர்கள் இந்த தர்ணா போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி அங்கு நேரில் வந்து, போராட்டம் நடத்தியவர்களுக்கு ஆதரவு வழங்கினார். மேலும், மாநில அரசு உடனடியாக அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா பரவல்

இதற்கு பதிலளித்துள்ள முதல்-மந்திரி எடியூரப்பா, “பி.யூ.கல்லூரிகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கலந்தாய்வும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. அதனால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும். அதனால் ஆசிரியர்கள் பயப்பட தேவை இல்லை“ என்றார்.

Next Story