போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்ட ரூ.32 லட்சம் மதிப்புள்ள நிலத்தை வாங்கியவர் கைது
போலி ஆவணங்கள் தயாரிப்பு மூலம் ரூ.32 லட்சம் மதிப்புள்ள காலிமனையை வாங்கியவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி,
ஈரோடு என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் மாதேசன் (வயது 65). இவருக்கு சொந்தமான 2,400 சதுர அடி காலி மனை திருச்சி மாவட்டம் செம்மங்கலம் என்ற இடத்தில் உள்ளது. இந்த காலி மனைக்கு போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு பொது ஆவண பகிர்வின் (பவர் பத்திரம்) மூலம் சேலம் மாவட்டம், கீரமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வடிவேல் என்பவருக்கு கிரையம் செய்யப்பட்டுள்ளது.
அவரிடமிருந்து அந்த நிலத்தை திருவெறும்பூர் எழில் நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ரவிச்சந்திரன் என்பவர் வாங்கி உள்ளார். இந்நிலையில் மாதேசன் ரூ.32 லட்சம் மதிப்புள்ள தனது காலிமனையை தனக்கு தெரியாமல் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை நடந்திருப்பதாகவும், அதனை கிரையம் பெற்றுள்ள ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் திருச்சி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை சூப்பிரண்டு பாலசுதர் கண்காணிப்பில், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணை முடிவில் போலி ஆவணங்கள் தயாரிப்பின் மூலம் விற்கப்பட்ட காலி மனையை வாங்கியதாக ரவிச்சந்திரனை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Tags :
Next Story