தஞ்சையில், கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி - டெல்டாவில் 278 பேருக்கு தொற்று


தஞ்சையில், கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி - டெல்டாவில் 278 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 14 Oct 2020 5:00 PM IST (Updated: 14 Oct 2020 4:47 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர். டெல்டாவில் ஒரே நாளில் 278 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 984 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 164 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 52 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 727 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 84 வயது ஆண் மற்றும் 69 வயது ஆண் ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 205 பேர் பலியாகி உள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 109 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,621 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 47 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 901 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 82 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தற்போது 638 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாகை மாவட்டத்தில் நேற்று மேலும் 51 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 952 ஆக உயர்ந்தது. நாகை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 92 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 54 பேர் நேற்று வீடு திரும்பினர். இதுவரை 5 ஆயிரத்து 334 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது வரை 526 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story