அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு 2-ம் கட்ட கலந்தாய்வு கலெக்டர் தகவல்
அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு 2-வது கட்ட கலந்தாய்வு நடக்கிறது.
நாகர்கோவில்,
இதுகுறித்து குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் இன்றைய நிலவரப்படி உள்ள தொழிற் பிரிவுகளில் ஒதுக்கீட்டின் அடிப்படையில் இரண்டாவது கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதற்கான பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு www.skilltraining.tn.gov.in வலைதளம் மூலம் 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து இன்று (புதன்கிழமை) வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தரவரிசை பட்டியல் நாளை (வியாழக்கிழமை) வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு...
இணையதளம் வாயிலாக விருப்ப அடிப்படையில் தங்களுக்கு விருப்பமான தொழிற் பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற் பிரிவை 16 மற்றும் 17-ந் தேதிகளில் தேர்வு செய்யலாம். அதனடிப்படையில் 19 மற்றும் 20-ந் தேதிகளில் தற்காலிக சேர்க்கை ஆணை தரப்படும். தொடர்ந்து சேர்க்கை கட்டணத்தை இரு தினங்களில் ஆன்லைன் மூலமாகவோ அல்லது அருகில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் உதவி மையம் மூலமாகவோ செலுத்தி சேர்க்கையினை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கோணம், நாகர்கோவில் 04652-260463, 261463, 265463 மற்றும் எஸ்.எம்.ஆர்.வி. அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிர்) நாகர்கோவில் 04652-222560 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story