முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த வாலிபர் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை
மும்பையில் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மாநில தலைநகர் மும்பையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. மக்கள் முக கவசம் அணியாமல் வெளியில் நடமாடுதல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல் போன்றவையே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இதையடுத்து மும்பை மாநகராட்சி முக கவசம் அணியாமல் வெளியில் நடமாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்களை பிடித்து அபராதம் விதித்து வருகிறது. இதற்காக சோதனை பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது.
வாலிபர் கைது
இந்தநிலையில் வான்கடே, சாவ்லி நாக்கா பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஒருவர் முகக்கவசம் இன்றி சுற்றித்திரிவதை கண்டனர். இதையடுத்து அதிகாரிகள் அவரை பிடித்து, அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு விசாரணை நடத்தியதில், அவர் பெயர் ராகுல் மதுகர்(வயது28) என்பது தெரியவந்தது. அவர் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்துகொண்டதற்கு சரியான காரணத்தை கூறாததால் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் சட்டப்பிரிவு 188 (அரசு பணியாளர்கள் விதித்த சட்டத்தை மீறுதல்) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Related Tags :
Next Story