தியேட்டர்கள் இன்று திறப்பு; கிருமி நாசினி தெளிப்பு


தியேட்டர்கள் இன்று திறப்பு; கிருமி நாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 15 Oct 2020 4:09 AM IST (Updated: 15 Oct 2020 4:09 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் இன்று முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டு படங்கள் திரையிடப்படுகின்றன. இதையொட்டி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

புதுச்சேரி,

கொரோனா காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. அடுத்தடுத்து பல் வேறு கட்டங்களாக கட்டுப் பாடுகள் தளர்த்தப்பட்டன. அதன்படி கடைகள், ஓட்டல் கள், கடற்கரை, போக்குவரத்து, பள்ளிகள் திறப்பு என மாமூல் வாழ்க்கைக்கு திரும்பின. பொழுதுபோக்கு அம்சமான தியேட்டர்கள் திறக்கப்படுவது எப்போது? என்ற எதிர் பார்ப்பில் அனைத்து தரப்பு மக்களும் இருந்து வந்தனர்.

இந்தநிலையில் தற்போது மத்திய அரசு கடந்த 30-ந் தேதி வெளியிட்ட 5-வது கட்ட தளர்வில் கொரோனா விதிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை பின்பற்றி தியேட்டர்களை திறக்கலாம் என்பது உள்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

அதன்படி புதுவையில் ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்டு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் தீர்வு அளித்து வருகிறார்கள். அடுத்தகட்டமாக இன்று (வியாழக்கிழமை) முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டு சினிமா காட்சிகள் திரையிடப் படுகின்றன. அதற்கான ஏற்பாடுகளில் தியேட்டர் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

கிருமிநாசினி தெளிப்பு

புதுவை திருவள்ளுவர் சாலையில் உள்ள சண்முகா தியேட்டரில் டிக்கெட் கட்டணமும், பார்க்கிங் கட்ட ணமும் குறைக்கப் பட்டுள்ளது. சுமார் 200 நாட்களுக்குப் பின் மீண்டும் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட இருப் பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தூய்மைப் படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தியேட்டர் வளாகம் முழு வதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் சமூக இடைவெளி விட்டு அமரும் வைகயில் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இதேபோல் மற்ற தியேட்டர் களிலும் திரைப்படங்களை திரையிடுவதற்கான ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று பகல் 12 மணி முதல் சினிமா காட்சிகள் திரை யிடப்பட உள்ளன. அரசின் விதிமுறைகளின்படி தியேட்டர்களுக்கு வருபவர் களுக்கு வெப்ப பரிசோதனை நடத்தி சானிடைசர் வழங் கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Next Story