ஆயுத பூஜையையொட்டி ஈரோட்டில் பொரி தயாரிக்கும் பணி தீவிரம்


ஆயுத பூஜையையொட்டி ஈரோட்டில் பொரி தயாரிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 15 Oct 2020 5:35 AM IST (Updated: 15 Oct 2020 5:35 AM IST)
t-max-icont-min-icon

ஆயுத பூஜையையொட்டி ஈரோட்டில் பொரி தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு,

ஆயுத பூஜை வருகிற 25-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த தினத்தில் வீடு, அலுவலகங்கள், நிறுவனங்களில் பூஜை செய்யப்படும். பூஜையில் முக்கிய பொருளாக பொரி வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இதனால் ஆயுத பூஜையையொட்டி ஈரோட்டில் பொரி உற்பத்தி செய்யும் பணி தற்போது தீவிரம் அடைந்து உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொரி ஈரோடு மட்டுமின்றி கோவை, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் பொரி உற்பத்தி செய்யும் தொழிலாளி ஒருவர் கூறியதாவது:-

பொரி தயாரிப்பதற்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து இன்டேல் -64 என்ற நெல் கொண்டு வரப்படுகிறது. இந்த நெல்கள் வேகவைத்து அரிசியாக்கப்படுகிறது. பின்னர் உப்பு, சர்க்கரை, சோடா உப்பு கலந்த தண்ணீரில் சுமார் 1 மணி நேரம் அரிசி ஊறவைக்கப்படும். இதைத்தொடர்ந்து அந்த அரிசி சுடுமணலில் போட்டு பொரியாக்கப்படுகிறது.

பாரம்பரிய முறை

பொரி தயாரிக்கும்போது எந்தவித ரசாயன பொருட்களையும் நாங்கள் கலப்பதில்லை. எந்திரங்களை பயன்படுத்தாமல் பாரம்பரிய முறையில் கைகளினால் பொரி தயார் செய்கிறோம். கடந்த ஆண்டு 100 படி கொண்ட ஒரு மூட்டை பொரி ரூ.550 முதல் ரூ.600 வரை விற்பனை செய்தோம். இந்த ஆண்டு விலை உயர்ந்துள்ளது.

விழாக்காலங்களில் மட்டுமே பொரி விற்பனை அமோகமாக இருப்பதால் இந்த தொழிலில் ஆண்டு முழுவதும் வருமானம் கிடைப்பதில்லை. இதன் காரணமாக ஈரோட்டில் ஒரு சில ஆலைகள் மட்டுமே இயங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story