கம்பம் அருகே முல்லைப் பெரியாற்றங்கரையில் மண்சரிவு வயல்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல்
கம்பம் அருகே முல்லை பெரியாற்றங்கரையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நெல் வயல்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உத்தமபாளையம்,
கம்பம் அருகே கருநாக்கமுத்தன்பட்டி முல்லைப்பெரியாற்று பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடந்து வருகிறது. ஆற்றின் இருபுறத்தையும் தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் காலத்தில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு மண்சரிவு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
இந்தநிலையில் கடந்த சில தினங்களாக முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. கருநாக்கமுத்தன்பட்டி வடக்கு மந்த வயல் பகுதியில் திடீரென ஆற்றங்கரையோரத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள நெல் வயல்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாயும் உடைந்தது. இதன் எதிரொலியாக, வயல் களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும்போதெல்லாம், கருநாக்கமுத்தன்பட்டி வடக்கு மந்த வயல் பகுதிகளில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். இதனை சரி செய்யும் வகையில் ஆற்றங்கரையோரத்தில் 40 அடி உயரத்தில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக உத்தமபாளையம் தாசில்தார் உதயராணியிடம் விவசாயிகள் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், முல்லைப்பெரியாற்று கரையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். மேலும் கரைகள் உடைவதை தடுக்க தடுப்புசுவர் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Related Tags :
Next Story