சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோக்கள்: மேகமலை வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடும் அபாயம்
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோக்களால், மேகமலை வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சின்னமனூர்,
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேகமலை உள்ளது. சிறந்த சுற்றுலாதலமான இது, தனது பெயருக்கு ஏற்ப மேகமும் மலையும் ஒன்றாக காட்சி அளிக்கும். சுற்றுலா பயணிகளின் கண்களை கொள்ளை கொள்ளும் எழில்மிகு காட்சிகளுக்கு அங்கு பஞ்சம் இல்லை. இதேபோல் சுற்றுலா பயணிகளை மிரள வைக்கும் வனவிலங்குகளின் கூடாரமாகவும் மேகமலை திகழ்கிறது.
இதனால் மேகமலையை மையமாக கொண்டு வன உயிரின சரணலாயம் உருவாக்கப்பட்டுள்ளது. சின்னமனூர், கம்பம், உத்தமபாளையம், கடமலைக்குண்டு ஆகிய வனசரகங்களை உள்ளடக்கிய பகுதியாக இந்த மேகமலை வன வனப்பகுதி விளங்குகிறது. இங்கு யானை, புலி, கரடி, மான், சிறுத்தை மற்றும் அரிய வகை உயிரினங்கள் அதிக அளவில் உள்ளன.
இந்தநிலையில் மேகமலை வன சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மலைக்கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதுஒருபுறம் இருக்க, மற்றொருபுறத்தில் வனவிலங்குகளை வேட்டையாடப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.
இதற்கிடையே தனியார் சுற்றுலா நிறுவனங்கள் வருமானம் ஈட்டும் வகையில், பல்வேறு சமூக வலைத்தள பக்கங்களை உருவாக்கியுள்ளன. இந்த நிறுவனங்கள், மேகமலையை சேர்ந்த ஒருசில நபர்களை கொண்டு வனப்பகுதியில் வலம் வருகிற யானை, சிறுத்தை, புலிகளின் நடமாட்டத்தை கண்டறிந்து அத்துமீறி படம் எடுக்கின்றனர். பின்னர் அவற்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் டிரோன் கேமரா மூலமாகவும், வனவிலங்குகளை கண்காணித்து, வீடியோ எடுத்து அதையும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேகமலை வனவிலங்குகள் தொடர்பான சமூக வலைத்தள பதிவுகளை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்க்கின்றனர்.
பின்னர் அந்த பதிவுகளை பகிர்ந்த தனியார் நிறுவனங்களை சுற்றுலா பயணிகள் தொடர்பு கொண்டு, வன விலங்குகளை பார்க்க வேண்டும் என்று கூறி அவர்கள் மூலம் மேகமலைக்கு வருகின்றனர். இதன்காரணமாக கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தள பதிவுகளை பார்த்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மேகமலை வனப்பகுதிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
மேலும் வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்பான சமூக வலைத்தளங் களில் பதிவுகளால், அவை மர்ம கும்பலால் வேட்டையாடப்படும் அபாயம் உள்ளது. எனவே தனியார் சுற்றுலா நிறுவனங்கள் சார்பில் உருவாக்கப்பட்ட சமூக வலைத்தள பக்கங்களை முடக்கி, மர்ம கும்பலால் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story