கள்ளக்குறிச்சியில் போலீசார் கொரோனா தடுப்பு உறுதிமொழி ஏற்பு சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தலைமையில் நடைபெற்றது


கள்ளக்குறிச்சியில் போலீசார் கொரோனா தடுப்பு உறுதிமொழி ஏற்பு சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தலைமையில் நடைபெற்றது
x
தினத்தந்தி 15 Oct 2020 8:49 AM IST (Updated: 15 Oct 2020 8:49 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தலைமையில் போலீசார் கொரோனா தடுப்பு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி,

கொரோனாவுக்கு எதிராக தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தலைமையில் போலீசார் கொரோனா தடுப்பு உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.

உறுதிமொழியில் எனக்கும் எனது நண்பர்களுக்கும் ஏற்படும் ஆபத்தை உணர்ந்து எச்சரிக்கையுடன் இருப்பேன். இந்த கிருமி தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நான் மேற்கொள்வேன். கொரோனா காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை நான் ஏற்படுத்துவேன். எப்போதும் குறிப்பாக பொது இடங்களில் முககவசம் அணிவது மற்றவர்களிடமிருந்து குறைந்தது 6 மீட்டர் இடைவெளியை கடைபிடிப்பது, சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளை அடிக்கடி நன்றாக கழுவுவது மற்றும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக போராடுவோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

உறுதிமொழியை போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் வாசிக்க அதை போலீசார் திருப்பி சொல்லி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பார்த்தீபன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், ஆனந்தராஜ் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக அமைச்சு பணியாளர்கள், ஆயுதப்படை போலீசார் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.

Next Story