மாவட்ட செய்திகள்

ஏலகிரி மலைப்பாதையில் கார், தலை குப்புற கவிழ்ந்து விபத்து + "||" + On the Yelagiri Hills Car, head trash overturn accident

ஏலகிரி மலைப்பாதையில் கார், தலை குப்புற கவிழ்ந்து விபத்து

ஏலகிரி மலைப்பாதையில் கார், தலை குப்புற கவிழ்ந்து விபத்து
ஏலகிரி மலைப்பாதையில் கார், சாலையின் தடுப்பு சுவரில் மோதிய கார் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள அத்தனாவூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 55), இவரின் தம்பி புங்கனூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் (48). இருவரும் ஏலகிரி மலையில் தங்கும் விடுதி உரிமையாளர்கள். நேற்று சொந்த வேலையாக அண்ணன்-தம்பி இருவரும் ஒரு காரில் திருப்பத்தூர் சென்று மாலை மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

ஏலகிரிமலைப்பாதையில் 10-வது கொண்டைஊசி வளையில் கார் வரும்போது, அந்த வழியாக மலையில் இருந்து கீழே மற்றொரு கார் இறங்கி கொண்டிருந்தது. ஓரிடத்தில் இரு கார்களும் மாறி செல்லும்போது, அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்தவர் திடீரென இரு கார்களுக்கு நடுவே நுழைந்துள்ளார். விபத்து ஏற்படாமல் இருக்க ஸ்ரீதர் தனது காரை ஒதுக்கி ஓட்ட முயன்றார்.

அந்த நேரத்தில் சாலையின் தடுப்பு சுவரில் மோதி கார் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அண்ணன், தம்பி இருவரும் காயமின்றி தப்பினர். விபத்துக்குள்ளான கார் கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. விபத்தால் மலைப்பாதையில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. ஏலகிரிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மரத்தில் கார் மோதியது: ஊராட்சி துணைத் தலைவர் உள்பட 10 பேர் படுகாயம்
சீர்காழி அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் ஊராட்சி துணைத் தலைவர் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
2. தஞ்சை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெயிண்டர் சாவு கார் மோதியது
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெயிண்டர் கார் மோதி இறந்தார்.