பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை - புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு பேட்டி


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை - புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
x
தினத்தந்தி 15 Oct 2020 3:53 PM (Updated: 15 Oct 2020 3:53 PM)
t-max-icont-min-icon

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம், 

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய செல்வநாகரத்தினம் சென்னையில் நிர்வாக உதவி காவல்துறை தலைவராக பணி மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அங்கு பணியாற்றிய ஓம்பிரகாஷ் மீனா நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த அவரை, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகேசன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்று கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொதுமக்கள் மற்றும் சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய குற்றங்கள் கண்டறியப்பட்டு அவற்றை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காவல்துறை உயரதிகாரிகளின் வழிகாட்டுதலுடன் நாகை மாவட்ட காவல்துறை மக்கள் நலனுக்காக தொடர்ந்து சீரிய முறையில் பணியாற்றும்.

குற்ற வழக்குகள் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்படும். காவல்துறை பொதுமக்களிடையே சுமூகமான முறையில் நல்லுறவு ஏற்படுத்தப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story