மாவட்ட செய்திகள்

டெல்டாவில், கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலி - ஒரே நாளில் 223 பேருக்கு தொற்று + "||" + In Delta, Corona kills 5 more - 223 infected in a single day

டெல்டாவில், கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலி - ஒரே நாளில் 223 பேருக்கு தொற்று

டெல்டாவில், கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலி - ஒரே நாளில் 223 பேருக்கு தொற்று
டெல்டாவில், கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியாகி உள்ளனர். ஒரே நாளில் 223 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா தொற்று தற்போது குறையத்தொடங்கி உள்ளது. 10 நாட்களுக்கும் மேலாக 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக 200-க்கும் குறைவாக இருந்தது. தற்போது 100-க்கும் குறைவாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மேலும் 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 84 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 181 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 233 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 644 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது ஆண் மற்றும் 72 வயது ஆண் ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 207 பேர் பலியாகி உள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 80 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,703 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 52 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 953 ஆக அதிகரித்துள்ளது. நேற்று திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 61, 64 வயது ஆண்கள் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர். மாவட்டத்தில் இதுவரை 84 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தற்போது 666 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாகை மாவட்டத்தில் நேற்று மேலும் 46 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 997 ஆக உயர்ந்தது. நாகை மாவட்டத்தில் 73 வயது ஆண் கொரோனாவுக்கு பலியானார். இதுவரை கொரோனா தொற்றுக்கு 93 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 52 பேர் நேற்று வீடு திரும்பினர். இதுவரை 5 ஆயிரத்து 386 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது வரை 518 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தேனி மாவட்டத்தில், கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலி - புதிதாக 295 பேருக்கு தொற்று
தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியாகியுள்ள நிலையில், புதிதாக 295 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலி
தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியானார்கள்.
3. குமரியில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலி - 155 பேருக்கு புதிதாக தொற்று
குமரியில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியாயினர். மேலும் 155 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.