ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் பானு ஆதெய்யா மரணம்


ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் பானு ஆதெய்யா மரணம்
x
தினத்தந்தி 16 Oct 2020 3:09 AM IST (Updated: 16 Oct 2020 3:09 AM IST)
t-max-icont-min-icon

ஆஸ்கர் விருது பெற்ற பழம்பெரும் ஆடை வடிவமைப்பாளரான பானு ஆதெய்யா மரணம் அடைந்தார்.

மும்பை,

மும்பையை சேர்ந்த பழம்பெரும் பெண் ஆடை வடிவமைப்பாளர் பானு ஆதெய்யா. பல ஆண்டுகளாக நோய் வாய்பட்டு இருந்த நிலையில் நேற்று காலை மும்பையில் உள்ள வீட்டில் உயிரிழந்தார். அவருக்கு வயது 91.

அவரது உடல் தென்மும்பையில் உள்ள சந்தன்வாடி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவர் 1956-ம் ஆண்டு வெளியான சி.ஐ.டி. திரைப்படத்தின் மூலம் ஆடை வடிவமைப்பாளராக அறிமுகம் ஆனார். அதன்பிறகு சுமார் 50 ஆண்டு திரையுலக பயணத்தில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி உள்ளார்.

முதல் இந்தியர்

1990-ம் ஆண்டு வெளியான ‘லெக்கின்’, 2001-ம் ஆண்டு வந்த ‘லகான்’ ஆகிய படங்களுக்காக தேசிய விருதையும் பெற்று உள்ளார். இதேபோல அவர் 1983-ம் ஆண்டு ரிச்சர்ட் அட்டென்பரோ இயக்கிய ‘காந்தி‘ என்ற படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்காக ஆஸ்கார் விருதை பெற்று இருந்தார்.

ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story