அண்ணா திடல் ஆக்கிரமிப்பு அகற்றம்


அண்ணா திடல் ஆக்கிரமிப்பு அகற்றம்
x
தினத்தந்தி 16 Oct 2020 4:15 AM IST (Updated: 16 Oct 2020 4:15 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் முக்கிய வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் அருண் உத்தரவிட்டார்.

புதுச்சேரி,

புதுவையில் முக்கிய வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் அருண் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கடந்த 12-ந் தேதி முதல் முதல் புதுவையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் புதுவை நகராட்சிக்கு சொந்தமான கம்பன் கலையரங்கம் எதிரில் அண்ணா திடல் பகுதிக்கான இடம் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக பலமுறை நகராட்சி விதிகளின்படி நோட்டீஸ்கள் கொடுத்தும் இந்த ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் இருந்து வந்தது. இதற்கிடையே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அண்ணா திடலை விளையாட்டு அரங்கமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி அண்ணா திடல் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டிடத்தை அகற்றும் பணி நேற்று நடந்தது. நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் இடித்து தள்ளப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க ஒதியஞ்சாலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story