அ.தி.மு.க. வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மனோஜ் பாண்டியனுக்கு உற்சாக வரவேற்பு + "||" + A.DMK Enthusiastic welcome to Steering Committee Member Manoj Pandian
அ.தி.மு.க. வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மனோஜ் பாண்டியனுக்கு உற்சாக வரவேற்பு
அ.தி.மு.க. வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மனோஜ் பாண்டியனுக்கு நெல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நெல்லை,
அ.தி.மு.க. வழிகாட்டுதல் குழு உறுப்பினராக முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் உள்பட 11 பேர் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் மனோஜ் பாண்டியன் சென்னையில் இருந்து நேற்று நெல்லை திரும்பினார். அவருக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து மனோஜ் பாண்டியன் கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும், சிலையின் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான தச்சை கணேசராஜா, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ., தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ., மாநில மகளிர் அணி செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான விஜிலா சத்யானந்த், கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, மாநில அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இ.நடராஜன், மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு,
மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் டென்சிங் சுவாமிதாஸ், மானூர் யூனியன் முன்னாள் தலைவர் கல்லூர் வேலாயுதம், மாநில அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன், பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன், பாளையங்கோட்டை ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் முத்துகுட்டி பாண்டியன், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் சிந்தாமணி ராமசுப்பு, எம்.ஜிஆர். மன்ற மாவட்ட துணை செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, சிறுபான்மை பிரிவு மகபூப் ஜான், நெல்லை சந்திப்பு கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, எஸ்.கே.எம்.சிவக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வந்துள்ள பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசையும் வழங்கி வரவேற்றனர்.
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திரமோடிக்கு செண்டை மேளதாளங்கள் முழங்க கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிநெடுக அ.தி.மு.க.-பா.ஜ.க.வினர் ஆர்ப்பரிப்புடன் கூடிய வரவேற்பை அளித்தனர்.
சாலை பாதுகாப்பை வலியுறுத்தி மேற்குவங்காளத்தை சேர்ந்த வாலிபர் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார். தஞ்சை வந்த அவருக்கு போலீசார் வரவேற்பு அளித்தனர்.
தே.மு.தி.க. அலுவலகத்திற்கு வந்த விஜயகாந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு தொண்டர்களை சந்தித்தார். அ.தி.மு.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.