அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் படிக்காசு வைத்தான் ஊராட்சியில் உள்ள லட்சுமியாபுரம் புதூர் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி யூனியன் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய குழுவை சேர்ந்த மூர்த்தி மற்றும் வீரணன் தலைமை தாங்கினர்.
லட்சுமியாபுரம் புதூர் பகுதி ஊர் தலைவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கணேசன், ஊர் கணக்காளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜுனன், ஒன்றிய செயலாளர் சசிகுமார், மாவட்ட குழுவை சேர்ந்த ஜோதி லட்சுமி, ஒன்றிய குழுவை சேர்ந்த இருளப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story