மாவட்ட செய்திகள்

பிஸ்கெட்டில் விஷம் தடவி கொடுத்து நாயை கொன்று விட்டு சந்தனமரம் வெட்டி கடத்தல் + "||" + Applying poison to biscuits, killing the dog, cutting down the sandalwood and abducting it

பிஸ்கெட்டில் விஷம் தடவி கொடுத்து நாயை கொன்று விட்டு சந்தனமரம் வெட்டி கடத்தல்

பிஸ்கெட்டில் விஷம் தடவி கொடுத்து நாயை கொன்று விட்டு சந்தனமரம் வெட்டி கடத்தல்
பிஸ்கெட்டில் விஷம் தடவி கொடுத்து நாயை கொன்று விட்டு சந்தன மரத்தை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.
பேரூர்,

கோவையை அடுத்த பேரூர் அருகே தீத்திபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குருநாதன் (வயது 50). விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் 40 ஆண்டுகளாக வளர்ந்த சந்தனமரம் உள்ளது. அதன் அருகே கூண்டில் தோட்ட காவலுக்காக 2 நாய்களை கட்டி பராமரித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு, குருநாதனின் தோட்டத்திற்குள் மர்ம நபர்கள் புகுந்தனர். அதை பார்த்து நாய்கள் குரைத்துள்ளன. உடனே அந்த மர்ம நபர்கள், பிஸ்கெட்டில் விஷம் தடவி நாய்களுக்கு போட்டு உள்ளனர். அதை சாப்பிட்டதும் நாய்கள் மயக்கம் அடைந்து விட்டன. இதையடுத்து, மர்ம நபர்கள் அங்கிருந்த மரம் அறுக்கும் எந்திரத்தால் சந்தனமரத்தை வெட்டி எடுத்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

இந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல் தோட்டத்திற்கு வந்த குருநாதன் பார்த்தார். அங்கு விஷம் தடவிய பிஸ்கெட்டை சாப்பிட்ட ஒரு நாய் இறந்து கிடந்தது. மற்றொரு நாய் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. மேலும் அங்கிருந்த சந்தன மரம் வெட்டப்பட்டு இருந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர், தோட்டத்தில் காவலுக்கு தங்கி இருக்கும் சரவணகுமாரின் அறைக்கு குருநாதன் சென்றார்.

அங்கு கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர், சரவணகுமாரிடம் விசாரித்தார். அவர், மர்ம நபர்கள் சந்தன மரத்தை வெட்டி கடத்தியது தெரிய வில்லை என்று கூறியதாக தெரிகிறது.

இது குறித்த புகாரின் பேரில் பேரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.