மராட்டிய அரசை ‘புல்டோசர் அரசாங்கம்’ என விமர்சித்த அம்ருதா பட்னாவிஸ்


மராட்டிய அரசை ‘புல்டோசர் அரசாங்கம்’ என விமர்சித்த அம்ருதா பட்னாவிஸ்
x
தினத்தந்தி 17 Oct 2020 2:50 AM IST (Updated: 17 Oct 2020 2:50 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய அரசை புல்டோசர் அரசாங்கம் என அம்ருதா பட்னாவிஸ் விமர்சித்து உள்ளார்.

மும்பை,

முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிஸ். இவர் பல்வேறு விவகாரங்களில் மாநில அரசை விமர்சித்து கருத்து கூறி வருகிறார். சமீபத்தில் கூட கோவில்களை திறக்கும் விவகாரத்தில் மாநில அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து பேசிய சிவசேனா பெண் பிரமுகர் ஒருவர், சிவசேனா தலைவர்கள் பேசினால், அவர் எங்கே போய் ஒளிந்து கொள்வது என தொியாமல் தவிப்பார் என கூறினார்.

புல்டோசர் அரசாங்கம்

சிவசேனா பெண் தலைவரின் பேச்சு குறித்து அம்ருதா பட்னாவிஸ் கூறுகையில், “எனக்கு வீடு இல்லை. எனவே இந்த ‘புல்டோசர் அரசாங்கத்தால்’ என்னை என்ன செய்து விட முடியும்” என கூறியுள்ளார்.

சமீபத்தில் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறிய நடிகை கங்கனாவின் பங்களா வீட்டின் ஒரு பகுதி புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது. எனவே தான் அம்ருதா மாநில அரசை ‘புல்டோசர் அரசாங்கம்’ என விமர்சித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story