கிருமாம்பாக்கம் பெரிய ஏரியை நவீன சுற்றுலாத் தலமாக்க பணிகள் தீவிரம் அமைச்சர் கந்தசாமி ஆய்வு
கிருமாம்பாக்கம் பெரிய ஏரியில் நடைபெற்று வரும் சுற்றுலா திட்ட பணிகளை அமைச்சர் கந்தசாமி ஆய்வு செய்து, விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பாகூர்,
ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை நவீன சுற்றுலாத்தலமாக மாற்ற அமைச்சர் கந்தசாமி சுற்றுலாத்துறைக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மத்திய அரசின் ரூர்பன் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.5 கோடி செலவில் நவீன சுற்றுலா தலமாக்குவதற்கான பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இங்கு உணவகம், சிறுவர் பூங்கா, படகு குழாம், ஏரிக்கு வரும் பறவைகளை காண்பதற்காக உயரமான கோபுரம் (வாட்ச் டவர்) மற்றும் ஏரிகரைகளை பலப்படுத்தி அழகுபடுத்தும் பணி ஆகியவை நடைபெற்று வருகிறது.
வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும்
இந்த பணிகளை அமைச்சர் கந்தசாமி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அனைத்து பணிகளையும் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் மத்திய கைவினைப் பொருட்கள் அபிவிருத்தி ஆணையரும், அலுவலக உதவி இயக்குனருமான வினோத்குமாருடன் சுற்றுலா திட்டத்தில் கைவினை கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் கடைகள் அமைப்பது குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிடம் பிரிவு செயற்பொறியாளர் ரமணி, இளநிலை பொறியாளர் பாலாஜி, சுற்றுலாத்துறை மேலாளர் பூபாலன், கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குனர் ரங்கநாதன், தொழில் முனைவோர் ஒருங்கிணைப்பாளர் லெனின் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story