தர்மபுரி மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2020 10:45 AM IST (Updated: 17 Oct 2020 10:45 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மொரப்பூர்,

தர்மபுரி மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ராமதாஸ், நிர்வாகிகள் செந்தில்குமார், கணேசமூர்த்தி, மூர்த்தி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் நல்லதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொப்பம்பட்டி ஊராட்சி செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார்.

இதில் ஊராட்சி செயலாளர்கள் மாதேஷ், முருகேசன், குணசேகரன், கிருஷ்ணன், ஜெயபிரகாஷ், இளவரசு, விக்ரமன், சந்திரன், சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் கணேசமூர்த்தி நன்றி கூறினார்.

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் பிரகாசம் தலைமை தாங்கினார். இதில் மேற்கு மண்டல தலைவர் செல்வம், இணைப்பு சங்க மாநிலத்தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். இதில் நிர்வாகிகள் ருக்மணி, ரமேஷ், கணேசன், அருள்மணி, மாதம்மாள், தெய்வானை, மணி உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முருகன், செயற்குழு உறுப்பினர் துரைவேல், ஒன்றிய தலைவர் பச்சியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய நிர்வாகி மகேந்திரன் வரவேற்றார். இதில் ஒன்றிய நிர்வாகிகள் சின்னசாமி, மூர்த்தி, தனபால், சாந்தகுமார், விஜயகுமார், லட்சுமணன் சிவலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய நிர்வாகி பரந்தாமன் நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஒன்றியம் தெற்குத்திட்டை ஊராட்சி செயலாளர் சிந்துஜா என்பவர் மீது பதியப்பட்டுள்ள வன்கொடுமை வழக்கை திரும்ப பெற வேண்டும். ஊராட்சி தலைவர்களுக்கு பதிலாக கணவர் மற்றும் உறவினர்கள் செயல்படுவதை தடை செய்ய வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Next Story