ராஜபாளையத்தில், 7 வயது சிறுமி கொலை; போலீசில் தந்தை சரண்


ராஜபாளையத்தில், 7 வயது சிறுமி கொலை; போலீசில் தந்தை சரண்
x
தினத்தந்தி 18 Oct 2020 3:00 AM IST (Updated: 18 Oct 2020 12:46 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் 7 வயது சிறுமியை கொலை செய்துவிட்டு, போலீசில் தந்தை சரண் அடைந்தார்.

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் எஸ்.ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் பழனிக்குமார். இவர் சத்திரப்பட்டி சாலையில் உள்ள ஒரு நூற்பாலையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இவருடைய மனைவி ராமலட்சுமி. இவர்களுடைய மகன் சுர்ஜித் (வயது 9), மகள் மகாலட்சுமி (7). இதில் மகாலட்சுமிக்கு பிறந்தது முதலே மனவளர்ச்சி குறைவாக இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று காலை ராமலட்சுமியும், சுர்ஜித்தும் வெளியே சென்றனர்.

மகள் மகாலட்சுமியை பழனிக்குமார் கவனித்து வந்தார். இந்தநிலையில் திடீரென மகாலட்சுமி அடம் பிடித்து அழுததாக கூறப்படுகிறது. எவ்வளவு கூறியும் மகாலட்சுமி தொடர்ந்து அடம்பிடித்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பழனிக்குமார், மகாலட்சுமியின் வாயையும், மூக்கையும் பொத்தி கொலை செய்தார். பின்னர் சிறிது நேரத்தில் பழனிக்குமார், ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மகளையே தந்தை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story