கர்நாடகத்தில் புதிதாக 7,184 பேருக்கு வைரஸ் தொற்று பெங்களூருவில் கொரோனா பலி 3,500 ஆக உயர்வு - சுகாதாரத்துறை தகவல்


கர்நாடகத்தில் புதிதாக 7,184 பேருக்கு வைரஸ் தொற்று பெங்களூருவில் கொரோனா பலி 3,500 ஆக உயர்வு - சுகாதாரத்துறை தகவல்
x
தினத்தந்தி 18 Oct 2020 3:30 AM IST (Updated: 18 Oct 2020 3:39 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் புதிதாக 7,184 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் 71 பேர் இறந்து உள்ளனர். குறிப்பாக பெங்களூருவில் மட்டும் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 3,500 ஆக உயர்ந்துள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்ததாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 7 லட்சத்து 51 ஆயிரத்து 390 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று புதிதாக 7 ஆயிரத்து 184 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்து 58 ஆயிரத்து 574 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 10 ஆயிரத்து 356 பேர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று மேலும் 71 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 427 ஆக உயர்ந்து உள்ளது.

புதிதாக பாகல்கோட்டையில் 152 பேரும், பல்லாரியில் 189 பேரும், பெலகாவியில் 298 பேரும், பெங்களூரு புறநகரில் 220 பேரும், பெங்களூரு நகரில் 3,371 பேரும், பீதரில் 10 பேரும், சாம்ராஜ்நகரில் 49 பேரும், சிக்பள்ளாப்பூரில் 124 பேரும், சிக்கமகளூருவில் 129 பேரும், சித்ரதுர்காவில் 80 பேரும், தட்சிண கன்னடாவில் 172 பேரும், தாவணகெரேயில் 41 பேரும், தார்வாரில் 99 பேரும், கதக்கில் 49 பேரும், ஹாசனில் 220 பேரும், ஹாவேரியில் 61 பேரும், கலபுரகியில் 40 பேரும், குடகில் 77 பேரும், கோலாரில் 78 பேரும், கொப்பலில் 65 பேரும், மண்டியாவில் 192 பேரும், மைசூருவில் 501 பேரும், ராய்ச்சூரில் 54 பேரும், ராமநகரில் 25 பேரும், சிவமொக்காவில் 129 பேரும், துமகூருவில் 281 பேரும், உடுப்பியில் 210 பேரும், உத்தர கன்னடாவில் 123 பேரும், விஜயாப்புராவில் 69 பேரும், யாதகிரியில் 76 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனாவுக்கு புதிதாக பெங்களூரு நகரில் 14 பேர், மைசூருவில் 10 பேர், கோலாரில் 5 பேர் உள்பட 71 பேர் இறந்துள்ளனர். நேற்று 8,893 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதன்மூலம் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 37 ஆயிரத்து 481 ஆக உயர்ந்து உள்ளது. 1 லட்சத்து 10 ஆயிரத்து 467 பேர் சிகிச்சையில் உள்ளனர். 940 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். நேற்று ஒரு லட்சத்து ஆயிரத்து 16 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 65 லட்சத்து 62 ஆயிரத்து 710 பேரின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Next Story