49-ம் ஆண்டு தொடக்க விழா: நெல்லையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
அ.தி.மு.க. 49-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, நெல்லையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லை,
அ.தி.மு.க. 49-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில், நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அதன் அருகில் ஜெயலலிதா படமும் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
அ.தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் தச்சை என்.கணேசராஜா தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கும், ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
விழாவில் அமைப்பு செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன், கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. சவுந்தரராஜன், மாவட்ட அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், சூப்பர் மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, கல்லூர் வேலாயுதம், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரியபெருமாள், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பால்துரை, முன்னாள் அமைப்பு செயலாளர் நாராயணபெருமாள், பணகுடி பேரூராட்சி முன்னாள் தலைவர் லாரன்ஸ், அரிஹரசிவசங்கர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் சிந்தாமணி ராமசுப்பு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் உவரி ராஜன்கிருபாநிதி, பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன், பாளையங்கோட்டை ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நெல்லை டவுன், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், சந்திப்பு ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க. கொடிக்கம்பங்களில் கட்சி நிர்வாகிகள் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
Related Tags :
Next Story