மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை தாண்டியது
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை தாண்டியது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 60 ஆயிரத்து 290 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், 15 ஆயிரத்து 984 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 4,140 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.
14 ஆயிரத்து 605 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். முகாமில் 4 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 140 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் சத்திரரெட்டிய பட்டியை சேர்ந்த 64 வயது முதியவர், காந்தி நகரை சேர்ந்த 73 வயது முதியவர், பாண்டியன் நகரை சேர்ந்த 40 வயது நபர், பாண்டியன் நகர் விவேகானந்தன் தெருவை சேர்ந்த 24 வயது பெண், ஆவுடையாபுரத்தை சேர்ந்த 27 வயது நபர், காரியாபட்டி, முடுக்கன் குளம், சித்தலக்குண்டு, செட்டிக்குறிச்சி, சுந்தரநாச்சியார்புரத்தை சேர்ந்த 2 பேர், ஜமீன் கொல்லாங்கொண்டான் உள்பட மாவட்டம் முழுவதும் 33 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 17 ஆக உயர்ந்துள்ளது. 1,635 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 6,140 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படாத நிலை உள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளியாக இல்லை. இதற்கான காரணமும் தெரியாத நிலையே உள்ளது.
இந்தநிலையில் மாவட்ட நிர்வாகம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் விஷ்ணுநகர், விருதுநகர் தாலுகாவில் ரோசல்பட்டி, அருப்புக்கோட்டை தாலுகாவில் சிதம்பராபுரம் ஆகிய 3 பகுதிகளை மட்டுமே கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்துள்ளது. சூலக்கரை, பாலையம்பட்டி, பாலவநத்தம் உள்ளிட்ட பல கிராமங்களில் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் விதிமுறைப்படி இந்த கிராமங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
ஆனால் மாவட்ட நிர்வாகம் 3 பகுதிகளை மட்டுமே கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்துள்ளது. இதனால் கிராம பகுதிகளில் தொடர்ந்து நோய் பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் பாதிப்பு ஏற்பட்டுள்ள கிராமங்களை கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிப்பதில் தயக்கம் காட்டாமல் அந்த கிராமங்களை கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
Related Tags :
Next Story